பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி இயக்குநர் மாநாடு- * 33 செங்கோட்டையைச் சுற்றிப் பார்த்தபோது, உணர்ச்சி பொங்கிற்று. அதைக் கட்டிய வரலாறு நினைவிற்கு வந்தது. சிற்றரசுகளாகச் சிதறிக்கிடப்பதிலும், சேரவேண்டிய நெருக்கடிகளிலும் சேரத் தவறிய தன்முனைப்பிலுமே இன்பங் அண்ட இந்திய மன்னர்கள், நாட்டைப் பலமுறை அயலவர்களின் ட்சிக்கு அடிமைப்படுத்தியது நினைவுக்கு வரவும், சோகம் பாங்கிற்று. - - கடைசியாக, இந்திய தேசியப் படையினரை, இராணுவ நீதிமன்றத்தில் விசாரித்த வரலாற்று நிகழ்ச்சியும் நினைவில் மின்னிற்று. --- 'உரிமை உணர்வு எத்தனை ஆழப்பதிந்து இருந்தாலும், பல்லாண்டுகளுக்குப் பிறகாவது கொப்பளிக்கும்! அத்ற்காக பயிரையும் விலையாகக் கொடுக்கும் உண்மை மனிதர்கள் தோன்றுவார்கள்” என்ற நம்பிக்கை மின்னிற் JD/. மனிதநேய ஒருமைப்பாடு அவ்வகையில் கொப்பளித்தால், 'முப்பில்லாத பாரத நாட்டவர் அனைவரும் ஒர் குலம் ஒர் இனம் என்னும் உணர்வு, ஒரு நாள் தழைக்கும்’ என்ற நம்பிக்கையோடு செங்கோட்டையைப் பார்த்துவிட்டு வெளியேறினேன். குடியரசுத் தன்லவரின் மாளிகையைக் காட்டினார். அதன் உள்ளே மணம் பரப்பிக் கொண்டிருந்த மொகலாயத் தோட்டம் கண்ணுக்கும் கருத்துக்கும் அருமையான விருந்தாக அமைந்தது. நாடாளுமன்றத்தைப் பார்த்தேன். பார்வையாளர் இருக்கையில் இருந்து சிலர் பேச்சுகளைக் கேட்க நேர்ந்தது. பழைய செயலகக் கட்டடத்தில், அமைச்சர் அளகேசனின் அலுவலகத்தைக் கண்டேன். - என்னுடன் படித்தவர் ஒருவர், நேருவின் நம்பிக்கைக்கு பரியவராக இருப்பதை எண்ணி மகிழ்ந்தேன். I புதுதில்லியில் மக்கள் சாலை, அரசு சாலை ஆகியவை ா|ெஆட்டும் காட்சி.' மொத்தத்தில் எனது முதல் தில்லி பயணம், செம்மையாக படிந்தது; தெம்பும் தெளிவும் கொடுத்தது; தன்நிறைவோடு சென்னைக்குத் திரும்பி வந்து சேர்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/73&oldid=788562" இலிருந்து மீள்விக்கப்பட்டது