பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 5. ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் திட்டம் ஆயத்தம் ஏழை பங்காளர், முதலமைச்சர் காமராசர் காட்டிய வழியில் என் சிந்தனை ஒடிற்று. அக்டோபருக்குப்பின், புதிய பள்ளிகள் திறப்பது வழக்கமில்லை. - எனவே, அத் திட்டத்திற்கு இரண்டாம் இடம் கொடுத்தேன். முதல் இடம் எதற்கு? = ஆசிரியர் அனைவருக்கும் ஒய்வு ஊதியம்.கொடுக்கும் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு முதல் இடம். ஏற்கெனவே இராஜாஜி காலத்தில், என்னிலும் பணிமூப்பு உடையவர்கள், முயன்று தோற்றுவிட்டார்கள் என்பதும் அடிக்க்டி நினைவிற்கு வந்தது. o இருப்பினும் பல இரவுகள் பல நாள்கள் இது பற்றியே சிந்தித்தேன். என்ன என்ன தகவல்களைச் சேகரிக்க வேண்டும்? ஒவ்வொன்றாகத் தென்பட்டது. “இத் திட்டத்திற்கு ஆண்டிற்கு எவ்வளவு செலவாகும்? எவ்வளவு பேர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஒய்வு ஊதியம் தர வேண்டும்’ என்பது தெளிவாகத் தெரிய வேண்டும். . - என்ன விழுக்காட்டில் கொடுப்பது? ஊதியத்தில் பாதியானால் எவ்வளவு செலவாகும்? ஊதியத்தில் காலானால் எவ்வளவோடு சமாளிக்கலாம்? கடந்த பத்தாண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் ஒய்வு பெற்றவர்கள் கணக்கைத் தனித்தனியாக, அலுவலகத்தில் இருந்து திரட்டினேன். -" - . - - == சராசரி கணக்கு எடுக்காமல், எந்த ஆண்டில் அதிகமான ஆசிரியர்கள் ஒய்வு பெற்றார்களோ, அதைக் கணக்கிற்கு எடுத்துக் கொண்டேன். உச்ச ஊதியத்தைக் கணக்கில் சேர்த்தேன். எவ்வளவு ஆண்டுகள் ஒய்வு ஊதியம் கொடுக்கவேண்டுமென்பது தெரிந்தால், அதுவரையில் ஒய்வுப் பட்டியலில் சேர்வோர் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு, செலவைக் கணக்குப் போடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/74&oldid=788573" இலிருந்து மீள்விக்கப்பட்டது