பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ll,""lui”olb*(* 9il9b#"u# #"-Lin - 37 வரவு செலவு திட்டங்களைப் பரிசீலித்து முடித்துவிட்டோம். பல்லோரும் பார்க்கும்படி, பொது வரவு செலவு திட்டத்தில் இது வாதது ஒருவகையில் நல்லதே. 'இது, நம் மூவரோடு இரகசியமாக இருக்கட்டும். அமைச்சரவையின் நிதிக்குழு கூடும்போது, நீங்கள் நேரே இதைக் குழுவில் வையுங்கள். அக் குழு கொள்கை பற்றிய இதை முடிவு செய்யட்டும்” என்று கோடு காட்டினார். - "அப்படியே செய்யலாம்” என்று அமைச்சர் முடிவு செய்தார். நிதிச் செயலர் தம்மிடம் இருந்த திட்டப் படிவத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். "நிதிக் குழுக் கூட்டம் வரையில் இது உங்களோடு இருக்கட்டும். உங்கள் நேரடிப் பாதுகாப்பில் இருக்கட்டும்” என்று வன்னிடம் மீண்டும் கூறினார். m ■ அப்படியே வாங்கி, பூட்டி வைத்துவிட்டேன். -- ஆசிரியர்களின் கூட்டங்களில் பேசும்போதும் இதுபற்றிச் பிறுகுறிப்பும் காட்டாமல், இருந்தேன். நிதிக் குழுவில் ஆய்வு சில வாரங்களுக்குப்பின், அமைச்சரவையின் நிதிக் குழு கூடிற்று. - -- அக் கூட்டத்திற்கு வரும்படி எனக்கு ஆணை வந்தது. முதலமைச்சர் காமராசர் தலைமை வகித்தார். நான், சென்று காத்து இருந்தேன். கல்வித் துறையின் முறை வந்தது. நிதிச்செயலர் பேச முன் வந்தார். என்னைக் குழுவிற்கு அறிமுகப்படுத்தினார். அப்புறம்? “கல்வித் துறையின் நிதிக் கோரிக்கைகள் பலவற்றில் ஒன்றைத் தவிர மற்றவற்றை ஏற்றுக் கொள்ளலாம். “ஒன்று மட்டும் புதிய திட்டம் பெரிய திட்டமும் ஆகும். பணச்செலவும் பெரிதாக இருக்கும். o “இவ்வளவு பெரிய திட்டத்தைக் கொண்டு வருவதா? எப்போது கொண்டு வருவது? "இவை, ஆட்சியின் கொள்கை பற்றியவை. இவற்றை அமைச்சர் அவையே முடிவு செய்ய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/77&oldid=788606" இலிருந்து மீள்விக்கப்பட்டது