பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவியர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் - 39 "...ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் கட்டாயமாக 'ஆயுள் காப்பு முப்பந்தம் எடுக்க வேண்டும். - "வெவ்வேறு நிலைகளுக்கான, குறைந்த அளவு ஒப்பந்தத் தொகையைத் திட்டமே சொல்லும். "ஒப்பந்தத்திற்குக் கட்ட வேண்டிய தவனைப் பணம் ஆசிரியருக்குச் சுமையாக மாறிவிடக்கூடாது. "...ஆகவே, வசதி இல்லாதவர்கள் காப்பு நிதி'யிலிருந்து, தவணைகளைச் செலுத்தலாம். "ஆயுள் காப்பு ஒப்பந்தம் எதற்கு? "ஒருவர், பணிக்காலத்தில் மறைந்துவிட்டால், அவரது குடும்பம் நடுத்தெருவில் நிற்கக்கூடாதென்பதற்காக! "தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள், கலைக் அஸ்லூரிகள் ஆகியவற்றில் பணிபுரியும் எல்லாவகை ஆசிரியர்களும் இதன் கீழ் வருவர்.” காமராசரின் கேள்விகள் நான், நிதிக் குழுவின்முன் இத் திட்டத்தை விளக்கி முடித்ததும், "இதற்கு எவ்வளவு தேவைப்படும்?” என்று முதல்வர் காமராசர் வினவினார். மதிப்பீட்டைக் கூறினேன். "இயக்குநர் போட்டிருக்கிற கணக்கை நீங்கள் பார்த்தீர்களா? அடிப்படை சரியா? அணுகுமுறையை ஒப்புக் கொள்ளலாமா? செலவு மதிப்பீடு குறைவா, அதிகமா?” என்று முதல்வர் நிதிச் செயலரைக் கேட்டார். "முன்னரே பார்த்துள்ளேன். அவர் பயன்படுத்தி யுள்ள அடிப்படையும் அணுகுமுறையும் சரியாக உள்ளன. புள்ளி விவரங்களுக்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. கணக்கும் சரிதான். "இந்தத் திட்டத்தை நிறைவேற்ற, இயக்குநர் கணக்கிட்டுள்ள தொகைக்குமேல் தேவைப்படாது. அவர் கணக்கிட்டிருப்பதைக் காட்டிலும் துல்லியமாகக் கணக்கிட முடியாது’ - இப்படி நிதிச் செயலர் கோடு காட்டினார். அலுவலரின் குறுக்கீடு அடுத்த நொடி, யாரோ ஒருவருடைய குரல் கணிரென முலித்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/79&oldid=788628" இலிருந்து மீள்விக்கப்பட்டது