பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

நெருக்கடி காரணமாக அரசினால் புறக்கணிக்கப்படுகிற மக்களின் பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கப் பெரிதும் உதவவல்லதாகிய நடைமுறை ஒன்றைச் செயல்படுத்தி, சுய தேவை பூர்த்தி விழிப்புணர்வை மக்களிடையே தூண்டியவர். தீபம் ஒளி மங்கும்போது தூண்டினால் பிரகாசமாக ஒளிவீசும்! இது நடைமுறை நிகழ்வு! சமுதாயத்தின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முன்வரும் அரசு, அதற்குரிய திட்டங்களில் மக்களையும் ஈடுபடச் செய்தால், அரசும் மக்களும் இணைந்த இரு கைகளாக ஒசை எழுப்பினால், எதிர்பார்ப்பதற்கும் மேலாகவே அதிகப் பயனை அறுவடை செய்யலாம். இதைச் செயல்படுத்திக் காட்டிய ஒரு துண்டுகோல்தான் இந்த வரலாற்றின் நாயகன்.

நம் சமுதாயத்தில் இன்றைய நிலை என்ன? சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் அருகி வருகின்றனர். குறிப்பிட்ட சாதி, சமயங்கள் சார்ந்த கல்வி நிறுவனங்களை இன்று நிருவகித்து வருகின்ற பொறுப்பாளர்கள், அவை தொடங்கப்பெற்ற காலத்தில் கருத்தில் கொள்ளப்பெற்ற அறச் சிந்தனையையும் தொண்டு மனப்பான்மையையும் மறந்துவிட்டனர். சமயச் சார்பற்ற அரசு அளிக்கும் நிதிஉதவியை, அவர்கள் தாம் சார்ந்துள்ள சாதி மற்றும் சமயத் தொடர்புடைய இனத்தவருக்கு மட்டும் பயன்படுத்தும் சூழலைப் பெருக்கி வளர்த்து வருகின்றனர். 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்கிற சமுதாய நலம் கருதும் தனி மனிதப் பண்பும் ’நாடெல்லாம் வாழக் கேடொன்றும் இல்லை’ என்கிற தனிமனிதனின் நலனைப் பேணும் சமுதாயப் பண்பும் தமிழகத்தில் சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைந்து கொண்டிருக்கின்றன. சமுதாய நலன் கருதிப் பயனாளிகளுக்குச் செலவு செய்யப்படும் நிதி முதலானவற்றைக் கண்காணிக்கக் கடுமையான சட்ட திட்ட விதிமுறைகளையும் தணிக்கை முறைகளையும் அரசு கொண்டுவந்தாலும் நிதியைக் கையாளும் அதிகார வர்க்கத்தினர் மாறவில்லை. இன்று மழைக்காலக் காளான்கள் போல் தோன்றி, வியாபார நிறுவனங்களாக மாறி விளம்பரத்துக்கும் ஆடம்பரத்துக்கும் முதலிடம் தரும் கல்வி நிறுவனங்களில் சமுதாயத்துக்குப் பயனுள்ள நிறைவான கல்வி வழங்கப் பெறுகிறதா? இந்தக் கேள்விக்குரிய விடையை எதிர்காலம்தான் முடிவுசெய்ய வேண்டும்! வளர்ந்து பெருகியுள்ள திரைப்படம், செய்தித்தாள், தொலைக்காட்சி, தகவல் வலை முதலான தகவல் தொடர்பு ஊடகங்கள் இளம் உள்ளங்களில் நஞ்சைத் திணிப்பதால் தவறான பாதைக்குள் காலடி வைத்து o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/8&oldid=480523" இலிருந்து மீள்விக்கப்பட்டது