பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 == +. நினைவு அலைகள் குறுக்கிட்டவர் எவர்? அமைச்சர்களில் ஒருவரா? இல்லை. மூத்த அலுவல்ர்களில் ஒருவர். அவர் பேச விரும்புவதாகக் கூறினார். “இது உங்களுக்குச் சம்பந்தம் இல்லாதது” என்று முதலமைச்சர் சொல்லி இருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் சொல்லவில்லை. * = - - "சொல்லுங்கள் உங்கள் கருத்தையும் தெரிந்து கொள்வோம்" என்றார். - “இந்த நாட்டில் பணிபுரிவோரில், ஆசிரியர்கள் மட்டுமே, நலிந்து கிடக்கவில்லை. எத்தனையோ பிரிவினர்.அவர்களைக் காட்டிலும் அதிக வறுமையில் நலிந்து உழல்கிறார்கள். “கை டநிலை ஊழியர்கள் என்ன, வசதியாகவா வாழ்கிறார்கள்: காவலர்களின் கதி எவருக்குத் தெரியாது. * = - “பல பிரிவினர், அல்லல்பட்டுக் கொண்டு இருக்கையில், ஆசிரியர் பிரிவுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பரிவு காட்டுவது சரி அல்ல. * * * a “ஆசிரியர்களைக் காட்டிலும் குறைந்த ஊதியம் வாங்கு வோருக்கும் சேர்த்து, பெரிய திட்டமாக்கி, ஆலோசியுங்கள். "இந்தப்பிரிவிற்கு அந்தப்பிரிவிற்கு என்று உதவிசெய்வது, பிற பிரிவினர்களிடையே கோரிக்கைகளைக் கிளப்பிவிடும்.” இது ஒர் அலுவலரின் ஆங்கிலப் பேச்சின் சுருக்கமாகும். அவ்வளவு பெரியவர், குறுக்குச்சால் ஒட்டிவிட்டதால், மூன் ДJ/ நன்மைத் திட்டம் எங்கே புதையுண்டு போகுமோ என்று அஞ்சினேன். _து - எவ்வளவு அப்பாவி, நான்? - "நீங்கள் சொல்வது தவ்றல்ல. ஏராளமானவர்களுக்கு நாம் கொடுக்கும் ஊதியம், ஒய்வுப் பணம், வசதிகள் ஆகியவை போதா. "அவற்றைச் சரி செய்வதே அரசின் வேலை. ஒட்டு மொத்தமாகச் செய்ய முடிந்தால் நல்லதுதான். முடியாவிட்டால், நம்மால் கூடிய விரைவில் எவருக்காவது வாழ்வு அளிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/80&oldid=788639" இலிருந்து மீள்விக்கப்பட்டது