பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நினைவு அலைகள் கல்வி பற்றிப் பல கருத்துகள் கூறப்பட்டன. தலைகுனிய வேண்டிய குறை ஏதும் கூறப்படவில்லை. தொட்டால் துடிக்கும் கட்டாய இந்தி பாடம் பற்றியும் கசப்பில்லாத, வெறுப்பில்லாத ஒரு சமரசம் ஏற்பட்டு இருந்த காலமாகையால், அதுபற்றிச் சட்ட மன்றத்தில் காரசாரமாகப் பேசத் தேவையில்லாமல் போயிற்று. சமரச ஏற்பாடு என்ன? இந்தி படிக்க விரும்பாதவர்கள் வேறு கல்வி நடவடிக்கையில் ஈடுபடலாம். கல்வி பற்றிக் கடுமையான கருத்து மோதல்கள் இல்லாமை. யால், கல்வி மான்யம், இடைவேளைக்கு முன்பே நிறைவேறி விட்டது. சண்முகம் பிள்ளையின் பாராட்டு அன்று சட்ட மன்றத்தில் பேசியவர்களில் திருவொற்றியூர் டி. சண்முகம் பிள்ளை ஒருவர். அவர் உள்ளாட்சித் துறையில் நீண்ட பட்டறிவு பெற்றவர்; பண்பாளர்; நாணயமானவர்; சுயமரியாதைக்காரர். அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது, அவரோடு இருந்தவர். சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர். - a * -- அவர், ஆசிரியர்களுக்கான மூன்று நன்மைத் திட்டத்தை வெகுவாகப் பாராட்டி வரவேற்பதாகவும் இயக்குநர் கெட்டிக்காரர் என்பது தமக்குத் தெரிந்தபோதிலும், அத் திட்டத்திற்கான செலவு தவறாக, மதிப்பிடப்பட்டு இருப்பதாகத் தாம் அச்சப்படுவதாகவும், அரசின் சார்பில் கோரப்படுவதைவிட அதிக நிதி தேவைப்படுமென்றும், எவ்வளவு செலவானாலும் அதை நடைமுறைப் படுத்தும்படியும் தமது உரையில் கூறினார். இதை முதலமைச்சர் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார். -- அவை கலையும்போது முதலமைச்சர், திரு. சண்முகம் பிள்ளையைத் தம்மோடு அழைத்துக்கொண்டு, அடுத்து இருந்த தம் அறைக்குச் சென்றார். என்னைப் பார்த்துத் தங்களுடன் அங்கு வரும்படி சொன்னார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/82&oldid=788661" இலிருந்து மீள்விக்கப்பட்டது