பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 6. பண்டித நேருவின் கவலை சிக்கல்கள் மண்டை உள்ளவரை சளி, வாழ்க்கை உள்ளவரை தொல்லை. சமுதாயம் உள்ளவரை சிக்கல்கள். இவற்றிற்கு அஞ்சி ஒடித் தப்ப முடியாது. - சிக்கல்களை நேரிட்டுப்பார்த்து, அவற்றைப்போக்குவதற்கான வழிமுறைகளைக் காண்பதே ஆட்சியின் பெரும் பொறுப்பு. இந்தியா விடுதலைபெற்ற சூட்டோடு நாட்டின் பல பகுதிகளில் வகுப்புக் கலவரங்கள் மூண்டன. - ஏதுமறியாத எளிய மக்கள், மதங்களின் பேரால் கொலைக்கும் கொடுமைக்கும் ஆளானார்கள். - அதோடு போட்டி போடும் வகையில் சிற்சில பகுதிகளில் ஆயுதம் தாங்கிய புரட்சிகள், நடத்தப்பட்டன. - இரண்டிற்கும் மாற்று என்று எண்ணி, அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இறுதியில் கலவரமும் திட்டுப் புரட்சிகளும் அடங்கின. - பரபரப்பூட்டும் அவற்றிற்கிடையே மற்றோர் தொல்லை முளைத்து வளர்ந்தது. தன்னாட்சி இந்தியா ஊட்டிய ஊக்கத்தால், பல்வேறு மாநிலங்களிலும் கல்வி வளர்ச்சி, அன்னிய ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. வேலையில்லாத திண்டாட்டம் பள்ளி இறுதிப் படிப்பை முடித்து, வேலை தேடுவோர், ஆண்டுக்கு ஆண்டு வேகமாகப் பெருகினர். ஆறு ஏழு ஆண்டுகளில் அத்தகையோர் எண்ணிக்கை ஆறு இலட்சத்தை எட்டிவிட்டது. அந்தத் தகவல், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் கவனத்திற்கு வந்தது. அது அவருடைய நெஞ்சில் ஆழமாக உறுத்திற்று. பிரதமர் நேரு சீமானாகப் பிறந்து, கோமானாக வளர்ந்தவர்தான்; இல்லாமை, போதாமை ஆகிய நோய்களுக்கு ஆளாகாதவர்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/86&oldid=788696" இலிருந்து மீள்விக்கப்பட்டது