பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&B நினைவு அலைகள் அய்ந்தாண்டு காலத்திற்கு அப்புறம்? மாநிலங்களுக்கு அளிக்கும் இந்தப் பங்கீடு பற்றி அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்வதற்காக ஒரு நிதிக் குழு நியமிக்கப்படும். "இந்திய நிதிக் குழு' அச் செலவையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பரிந்துரைகளை வழங்கும். மக்கள் மேம்பாட்டின் உயிர்நாடியாகிய கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் படித்தவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அத் திட்டம், பெய்யெனப் பெய்த வான் மழையாக வந்தது. சென்னை மாகாணத்திற்கு ஆறாயிரம் பேர் - முதல் ஆண்டில் அன்றைய சென்னை மாகாணத்திற்குத் தேவையான ஆறாயிரம் பேர்களை ஒதுக்கினார்கள். மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கல் தொலைவில் பள்ளி இல்லாத, அய்ந்நூறு மக்கள் வாழும் சிற்றுார்கள் எத்தனை என்ற கணக்கு ஏற்கெனவே அரசிடம் இருந்தது. -- ■ அதை அடிப்படையாகக் கொண்டு, ஆறாயிரம் பேர்களையும் மாவட்டங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தது பொதுக்கல்வி இயக்ககம். ஆட்சிக்கு வேண்டியவர்கள் ஆதிக்கத்தில்ா, மற்றவர்கள் ஆதிக்கத்திலா, குறிப்பிட்ட மாவட்டம் இருக்கிறது என்பதே கனக்கில் வரவில்லை. பொதுக்கல்வி இயக்ககம், கட்சி கடந்த கண்ணோட்டத்தோடு செயல்பட உரிமை இருந்தது. m எவரும் தலையிடாததால், அவ்வுரிமையைச் செம்மையாகப் பயன்படுத்திப் பொதுமக்களுக்குப் பரவலான முறையில் நன்மையும், கல்வித் துறைக்கு என்றும் இல்லாத பெருமதிப்பும் பெற்றுத் தர என்னால் முடிந்தது. - மாநிலப் பங்கீடு நியாயமானதாக இருந்தது போலவே, மாவட்டத்திற்குள் பல பகுதிகளுக்கும் பங்கிட்டுத் தருவதிலும் கட்சிக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டு, பள்ளியில்லா ஊர்களைத் தேடிப் பள்ளிகளைத் திறப்பதிலும் நியாயம் செயல்: பட்டதால், கல்வி வளர்ச்சியில் ஈடுபட்ட அனைவருக்குமே அந்த நாளில் நற்பெயர் கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/88&oldid=788698" இலிருந்து மீள்விக்கப்பட்டது