பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித நேருவின் கவலை si 49 அவர்கள் காட்டிய சுட்டுவிரல் கண்டு, அந்தந்தப் பகுதி மக்கள் அ. கார்கள்; திறமையாகச் செயல்பட்டார்கள். சில மாவட்டங்களை மட்டுமே கல்வித் துறையின் வமையகம், நெம்புகோல் கொண்டு உந்தித் தள்ள நேரிட்டது. பெரும்பாலானவை, மின்னலெனச் செயல்பட்டன. எனக்கு ஒத்துழைப்பு கொடுக்காத மாவட்ட ஆட்சிக் குழுவே |lலை என்று கூறிவிடலாம். கு. இராமசுப்பு ரெட்டியாரின் பணி அப்படி ஒத்துழைத்த மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவர்களில் சவரையாவது இங்கே குறிப்பிட வேண்டும். திக்கெலாம் புகழ்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில்கூட, சிறப்பாகக் கோயில்பட்டிப் பகுதியில், எத்தனையோ ஊர்களில் தொடக்கப் பள்ளிகூட இல்லாத அவலநிலை அவ்வூர்களில் பள்ளி தொடங்க விரைந்து நடவடிக்கை எடுத்த நல்லவர், இன்னும் |lமோடு வாழ்கிறார். அவர், அந்தக் காலத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவராகவும் சென்னை சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தார்; மாகாணக் கல்வித் துறைக்கு என்றும் உறுதுணையாக விளங்கிச் செயல்பட்டார். - அவர்தான் அந்த நாளில் நீதிக் கட்சியில் துணிச்சலுடன் தொண்டாற்றி வந்த குடும்பத்தைச் சேர்ந்த திரு. கு. இராமசுப்பு rெட்டியார். அவர் நீதிக் கட்சியின் கல்வி அமைச்சராக இருந்த திரு. குமாரசுவாமி ரெட்டியாரின் அருமை மகன். - வீட்டுப் பணத்தைச் செலவிட்டுப் பொதுத்தொண்டு ஆற்றிய தன்னலம் அற்ற திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர், குமாரசுவாமி ரெட்டியார். அந்த நன்மரபினைப் பின்பற்றியே, பொதுத் தொண்டில் சிறந்து விளங்கியவர் திரு. இராமசுப்பு. இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். உண்மையான பொதுநல உணர்வும் இயற்கையான கல்வி நாட்டமும் கொண்ட இராமசுப்பு, சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/89&oldid=788699" இலிருந்து மீள்விக்கப்பட்டது