பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - நினைவு அலைகள் சிலநாள் உடனடியாக’ என்று முத்திரையிடப்பட் கோப்புகளைக்கூட, பார்க்க நேரம் கிடையாது. அந் நேரங்களில் ஒரு உபாயத்தைக் கடைப்பிடித்தேன். எனது காரில் இருக்கையில் கோப்புகளை வைத்துக்கொண்டு, சென்னை நகர நெடுஞ்சாலை வழியாக அரைமணி ஒருமணிவரை சுற்றிக்கொண்டே கோப்புகளைப் பார்த்ததுண்டு. அந்த காலத்தில் எந்தத் துறைத் தலைவருக்கும் அரசின் செலவில் கார் கொடுக்கப்படவில்லை. இந்தக் காலப் பெரியவர்களுக்கு என் சொந்தக் காரில் சொந்தச் செலவில் நகரைச் சுற்றி வந்து, அரசு அலுவலைப் பார்த்த என்னை மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பத் தோன்றும். லஜபதிராயின் தியாகம், காந்தியின் தன்னல மறுப்பு, தியாகராசரின் பற்றற்ற நிலை, பெரியாரின் பொதுத் தொண்டு ஆகியவை அவ்வளவு தூரம் என்னைக் கெடுத்துவிட்டன. அது கிடக்கட்டும். பொ. வே. தாஸ், எம். ஏ., பி. எல். ஒருநாள் காலை எட்டு மணிபோல், என்னைத் தேடி என் வீட்டிற்கு வந்தார், மூத்த நண்பர் ஒருவர். அவரோடு கல்லூரிப் பருவத்தில் அறிமுகமானேன்; நண்பன் ஆனேன்; ஒரேவகையான குறிக்கோள் உடையவர்களானோம். பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப்பின், மதுரை மாவட்டக் கல்வி அலுவலராகச் சென்றபோது, பழைய தொடர்பினைப் புதுப்பித்துக் கொண்டேன்; அடிக்கடி கண்டு அளவளாவினோம். அந்த நெருங்கிய நண்பரே என் வீட்டிற்கு வந்தார். o அவர், திண்டுக்கல்லில் அப்போது வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டு இருந்த திரு.பொ.வேதாஸ், எம். ஏ. பி. எல். அவர்கள்தான். அவரது தந்தையார் திரு. பொன்னுசாமி நாயுடு, மதுரை மாவட்டப் பொது வாழ்க்கையில் புகழ்பெற்று விளங்கிய நிலக்கிழார். அவரது அருமைப் புதல்வரோ, மாணவப் பருவம் முதல் காங்கிரசு இயக்கத்தவர்; படிப்பை முடித்தபின், திண்டுக்கல்லில் வழக்குரைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார்; பொதுத் தொண்டில் ஈடுபட்டார்; பல அமைப்புகளில் முன்னணியில் விளங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/92&oldid=788702" இலிருந்து மீள்விக்கப்பட்டது