பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காய "哑 என் படத்தைத் திறந்தார் 55 "நீங்களே வம்பைத் தேடிக் கொண்டீர்கள்; அப்போதே 1வண்டாம் என்றேன். என் பேச்சைக் கேட்காமல் பரிந்துரைத்தீர்கள். "இப்போது அவர்தான், உங்களுக்கு இயக்குநர் பதவி கொடுத்தது சரியல்ல. தமக்கே பதவி உயர்வுதந்து இருக்கவேண்டும்’ வறு "ரிட் மனுப் போட்டிருக்கிறார்” என்றார் அமைச்சர். அமைச்சர் பேச்சில் வெகுளியோ எரிச்சலோ இல்லை. ப|ாகப் பரிதாபம் வெளிப்பட்டது. வழக்கு வழக்குத் தொடரும் நிலை எப்படி உருவாயிற்று? முப்பது ஆண்டுகளுக்கு முன் அரசு ஊழியர்களோ, ஆசிரியர் களோ ஐம்பத்தைந்து வயதை முடித்ததும் ஒய்வு பெற வெண்டுமென்பது விதி. சனவரி முப்பதாம் நாள் உரிய வயதை முடித்தால், அடுத்த ஒரு நாளும் வேலையில் இருந்து விட்டுப் போக இயலாது. கல்வியாண்டு தொடங்கிய பிறகு, இடையில் ஆசிரியர்கள் ஆய்வு பெற்றால் மாற்று ஆசிரியர் வந்து சேரக் காலதாமதம் ஆவது | lடு. - அதனால், மாணவ, மாணவிகளின் படிப்பு கெடுவதுண்டு. முன்பெல்லாம் சில பள்ளிகளும் சில ஆசிரியர்களும் மட்டுமே இருந்ததால், ஒருவர் நடுவில் ஒய்வு பெற்றதால், காலியான இடங்கள் சி. வாக இருந்தன. * திரு. டி. பி. சந்தானகிருஷ்ண நாயுடு கல்வித் துறையின் விழிப்படிக் கட்டுகளில் கால் எடுத்து வைத்து, துணை இயக்குநர்அா பதவி உயர்வு பெற்றார். பணிக்கால இறுதியில் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் அலுரி முதல்வராக மாற்றப்பட்டார். அதுவும் துணை இயக்குநர் நிலையில் உள்ள பதவியாகும். திரு. நாயுடு, ஆசிரியர் கல்லூரி முதல்வராகப் பணி புரிகையில் ஓய்வுபெறும் வயதை நெருங்கினார். அப்போது நான், அலுவலர் விவகாரங்களைப் பார்க்கும் அணை இயக்குநராக இருந்து வந்தேன். +.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/95&oldid=788705" இலிருந்து மீள்விக்கப்பட்டது