பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 நினைவு அலைகள் எனவே, மாற்று ஏற்பாடு பற்றி இயக்குநரோடு கலந்து பேசினேன். திரு. நாயுடுவை அக் கல்வி ஆண்டு முடியும்வரை மீண்டும் பணியில் நியமிக்கலாம் என்பது இயக்குநரின் கருத்து. அரசுக்கு அப்படியே பரிந்துரை அனுப்பப்பட்டது. இயக்குநர் விரும்பியபடி, அதற்கு ஆதரவாகக் கல்வி அமைச்சரிடம் பேசினேன். பரிந்துரை ஏற்கப்பட்டது. ஒய்வுபெற்ற நாயுடுவை, கல்லூரிக்குக் கோடை விடுமுறை விடும் வரை மறுநியமனம் செய்தது அரசு. அதன் விளைவாக, 1954 அக்டோபரில் இயக்குநர் நியமனம் செய்கையில் நாயுடு மறுவேலை அடிப்படையிலேயே பணியில் இருந்தார். பணி மூப்பில் டாக்டர் பால், நெ. து. சுந்தரவடிவேலு ஆகிய இருவருக்கும் முந்தியவனாகிய தன்னை இயக்குநராக நியமிக்க ஆணையிடும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தொடுத்தார். அரசு எடுத்த நிலை என்ன? திரு. நாயுடுவுக்குக் கொடுத்தது, பதவி நீடிப்பு அல்ல; அவரை ஒய்வுபெறச் செய்தபின், மீண்டும் வேலை’க்கு அமர்த்தியுள்ளோம் அவ்வளவே! ஒய்வுபெற்றுவிட்ட அவருக்கு இயக்குநர் பதவிக்கு உரிமை இல்லை. இது அரசின் வாதம். உயர்நீதிமன்றம் மேற்படி வழக்கை விசாரித்துத் தள்ளிவிட்டது. அப்படித் தள்ளுவதற்கு முன்புதான் அமைச்சர், நான் வம்பைத் தேடிக் கொண்டதாக வருந்தினார். வழக்கு நடக்கையிலும் வழக்கு முடிந்தபிறகும் நான் திரு நாயுடுவிடம் சிறிதும் பகையுணர்ச்சி கொள்ளவில்லை. பழையபடிநண்பனாகவே நடந்து கொண்டேன். திரு. நாயுடு ஒய்வு பெற்ற பிறகு, சென்னை ஆசிரியர் தொகுதியிலிருந்து மேலவைக்குத் தேர்தல் வந்தது. அவர் அதில் போட்டியிட்டார். அதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்குப் பலநாள் முன்னதாகவே, என்னை அணுகி என் ஆதரவை நாடினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/96&oldid=788706" இலிருந்து மீள்விக்கப்பட்டது