பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 நிமிர்ந்து நில் துணிந்து செல் நிமிர்ந்து நில் துணிந்து செல் 1. வணக்கம் வரவேற்கிறோம்! வணக்கத்திற்குரிய வாழ்க்கை வாழ, பிறர் போற்றும் பெருமைகள் பெற நாம் வாழ வேண்டும். இந்த தலைப்பு வரவேற்கத் தகுந்ததா? வணக்கத்திற்குரியதாக வாழ்வுக்கு உதவுமா! வழிகாட்டுமா? வாழ் விக்குமா? என்றெல்லாம் பல நினைவுகள் பறந்து வருகின்றனவா? உண்மைதான்! வந்துதானே ஆக வேண்டும்! உள்ளத்தில், ஊறிவரும் சிந்தனையின், இப்படி எழுச்சிபெறுகிற எண்ணங்கள் தப்படிபோடுகிறபோது தான், செப்படி வித்தையில் நிகழ்வது போல பல சிறப்பான செயல்கள் நடை பெறுகின்றன. நடைபெற்றுவிடுகின்றன. நர்த்தனமும் புரிந்து விடுகின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது ஒரு குறிக்கோள். நாம் அறிவோம். வாழ் வாங்கு வாழ வேண்டும் என்பது ஒரு லட்சியம். நமக்கும் தெரியும் எப்படி என்ற கேள்வியில் தான், அந்த வாழ்க்கையின் வடிவம் நமக்கு தோன்றுகிறது.