பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 11 எவ்வளவு ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டு, இந்த வாழ்க்கை எனும் சொல் வடிவம் பெற்றுக் கொண்டிருக்கிறது பாருங்கள். வாழ்க்கை எனும் சொல் வாழ்க்கை என்ற சொல்லை, பிரித்துப் பாருங்கள். அதன் உள்ளே எத்தனை சொற்கள் சங்கமமாகிக் கிடக்கின்றன என்பது புரியும். - வாகை என்ற நான்கு சொற்கள் இங்கே தலை காட்டியிருக்கின்றன என்பதைவிட, களைகட்டிக் கொண்டிருக்கின்றது என்று சொல்வதுதான் சாலப் பொருத்தமாகும். இந்த வார்த்தைகளைக் கொஞ்சம் விளக்கிப்பார்ப் போம். விளங்கிக் கொள்வோம் வாருங்கள். & His . 'வா என்ற சொல், உங்களை அன் போடு அழைக்கிறது. அதிகாரத்தோடும் அழைக்கிறது. ஆனந்தக்களிப்போடும் அழைக்கிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள் அல்லவா! ஆமாம் தாயின் அணைப்பு:தந்தையின் இணைப்பு. நண்பர்கள் அழைப்புபோல, உங்கள் காதில் விழுவதை கேட்கிறீர்கள் அல்லவா!