பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஆமாம்! வாழ வாருங்கள் என்று வரவேற்புரை வழங்குகிறது அந்த சொல் 'வா என்று. 'வந்துவிட்டோம் இங்கே பிறந்துவிட்டோம் இங்கே என்று நினைவூட்டி வாருங்கள்! இந்த புண்ணிய பூமியை, எண்ணற்ற எழில் மிகுந்த இந்த பூவுலகைப் பாருங்கள் வாழுங்கள் வழி நடத்தி. இங்கே உங்களுக்கு என்ன குறை? எந்தக் குறையும் இல்லை. நிறைவான நெஞ்சத்தோடு வாழுங்கள் என்று கூறி கம்பீரமாக வரவேற்பதைத்தான் 'வா என்ற சொல், நமக்கு விளக்கிக் காட்டுகிறது. வாழ்: 'வாழ்' என்பதும் ஒரு கட்டளைச் சொல்தான். வாழ்வு என்று வாழ்த்துவது போலத் தொடங்கி, வாழ்க என்று கட்டளையிடும் ஒரு ஓங்கார ஒலி நமக்கு கேட்கிறதல்லவா! சீரோடும் சிறப்போடும், பேரோடும் புகழோடும் அருளோடும் பொருளோடும்; வலிவோடும், பொலிவோடும், தரமோடும் திறமோடும், பணமோடும் குணமோடும் வாழ்' என்று வாழ்த்துகிற சொல்லாக அமைந்து இருக்கிறது பார்த்தீர்களா! வாழ்ந்துதான் ஆக வேண்டும்: வாழ்ந்துதான் தீர வேண்டும். அதை நீ தவிர்க்கவே முடியாது. ஒடி ஒளிந்து கொள்ளலாம் என்பதும் முடியாது. நீ எதையும் எதிர்பார்த்தே வாழ்ந்தாக வேண்டும். எதிலும் பங்கு பெற்றே தீர வேண்டும்.