பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஒழுக்கம் இழந்தவர், உயிரோடு இருந்தால், அவரின் நிலை என்ன தெரியுமா? தலையில் இருக்கும்போது முடி, குழல், கூந்தல் என்பது, தலையைவிட்டு கீழே விழுந்து விட்டால், உரியவனே அதை ஒதுக்கி விடுவதோடுமட்டுமின்றி, அருவெறுப்புடன் பார்ப்பானே! அதற்கு 'மயிர் என்ற பெயரையும் தந்து, மரியாதையும் மாறிப் பேசுவானே! முடி என்ற சொல், கேவலமாக ஒருவரை ஏசும்கெட்ட சொல்லாக வீசப்படுகிறதே. ஆகவே, ஒழுக்கமாக வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை; உன்னத வாழ்க்கை; ஒப்பற்ற வாழ்க்கை, எப்பொழுதும் ஏற்றம் தரும் வாழ்க்கை என்பதை வற்புறுத்தவே, கை என்ற சொல்லை, வாழ்க்கை என்பதில் புகுத்தியிருக் கிறார்கள். ஒழுக்கம் உள்ளவனே, உண்மையான ஒரு நன்மை மிக்க வாழ்க்கையை, மேன்மை மிக்க வாழ்க்கையை வாழ முடியும் என்று வழி காட்டவே, கை என்ற சொல், இங்கே பெய்யப்பட்டிருக்கிறது. ᏮaᏗIᎢ6öᏱᏋ ; வாகை என்ற சொல், வெற்றி என்ற பொருளைத் தருகிறது. வெற்றிகரமாக வாழவேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் லட்சியம். அதாவது மனிதராகப் பிறந்த அனைவருக்கும் சொந்தமான தத்துவம் இது. இந்த உலகத்தின் பெருமை என்று பேசப்படும் மொழிதான்.