பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் - 15 வந்தவர் எல்லோரும் இங்கே வாழ்வது இல்லை. வந்தவழி எப்படித் தெரியாதோ, அதுபோலவே, போகும் வழியும் தெரியாது. போகும் நேரமும் புரியாது என்ற பெருமையுடைய இந்த உலகில் வாழ்கிறார்கள். லட்சக் கணக்கான குழதந்தைகள் ஒரே நாளில் இறந்து போகிறார்கள், என்றாலும் எல்லோரையும் எல்லோருக்கும் தெரிவது இல்லையே! ஒரு சிலரைத்தானே உலக மக்களுக்குத் தெரிகிறது ஒரு சிலரைத்தானே உலகம் புகழ்கிறது? வாழ்த்துகிறது? நினைத்து நினைத்துப் பெருமைப்படுகிறது. அது ஏன்? 'எண்ணிலா மீன்கள் வானில்! எதற்கெல்லாம் பெயர்கள் உண்டு? எண்ணிலா மீன்கள் நீரில்! எதற்கெல்லாம் பெயர்கள் உண்டு? எண்ணிலா மக்கள் பாரில்! எவர்க்கெல்லாம் பெயர்கள் உண்டு! எண்ணிப்பார் மனிதா இந்த இலட்சியம் புரியும் ஜோராய்!" வானத்திலே உள்ள கோடிக் கணக்கான விண்மீன்கள். கடலிலே வாழும் கோடிக்கணக்கான மீன்கள் கூட்டம், இவற்றிலே எத்தனை மீன்களின் பெயர்கள் நமக்குத் தெரியும் ஒரு சில மீன்கள், ஒரு சில நட்சத்திரங்களின் பெயர்கள் தானே நமக்குத் தெரியும்.