பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் வந்து வாழ்ந்து மடிந்து போனார்கள். அவர்களிலே ஒருசிலரை மட்டும்தானே வரலாறு வாழ்த்துகிறது. மனித இனம் வணங்குகிறது! புகழ்பாடுகிறது. பூஜை செய்கிறது. அந்த வணக்கத்திற்குரிய வாழ்க்கையைத்தான் வெற்றிகரமான வாழ்க்கை என்று, வாகை என்ற சொல் குறிக்கிறது. வாழ்க்கை என்ற சொல், எவ்வளவு பொருள் பொதிந்த சொல் என்பது இப்போது நமக்கு புரிந்திருக்கிற தல்லவா!