பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் - 17 2. வாழ்க்கைக்கு வணக்கம் வா! வளமாக வாழ், ஒழுக்கத்துடன் வாழ்! வெற்றிகரமாக வாழ்! என்பதுதான் வாழ்க்கை, என்பதை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். புரிந்து கொண்டிருக்கிறோம். - வளமாக வாழ வேண்டும் என்பதுதான் வாழ்க்கை இலட்சியம் என்றால், எப்படி வாழ வேண்டும் என்ற கேள்வி ஒன்று உடனே கிளம்புகிறது அல்லவா! தமிழில் வாழ்க்கை என்ற சொல்லுக்குள் ஒளிந்திருந்த சூட்சமத்தை அறிந்து கொண்டோம். அகிலம் புகழும் ஆங்கிலத்தில்; அமைந்திருக்கும் ஒரு சொல்-வாழ்க்கையைக் குறிக்கும் விவரமான சொல். அந்த அருமையான சொல்லில் அமிழ்ந்து கிடக்கும் ஆழமான அற்புதம் மிகுந்த கருத்துக்களையும் பார்ப்போம். நமக்கு எப்படி வாழ வேண்டும் என்ற ஒரு வேகமே பிறந்துவிடும். லைப் (Life) என்ற சொல்லில் உள்ள நான்கு எழுத்துக்கள் எந்தெந்த சொற்களைக் குறித்திருக்கிறது என்று காண்போம். L = Learning I = Inspiration F = Fitness E = Education.