பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அதாவது கற்றல்; உற்சாகம் கொள்ளுதல்; வலிமையாக இருத்தல்; திறமையோடு செயல்படுதல் என்று நாம் நல்ல பொருள் கொள்ளலாம். இனி ஒவ்வொரு திறமையைப் பற்றியும், சற்று நுண்மையுடன் ஆராய்வோம். 1. கற்றுக்கொள்ளுதல் (Learning) அறிந்துகொள்வதைத்தான் அறிவு என்கிறோம். போதனையால் பெறுவதை புத்தி என்கிறோம். தானாய் பெருகுவதை ஞானம் என்கிறோம். இப்படிக் கற்றுக் கொள்வதை அனுபவங்கள் மூலமாக அடைவதுதான் சாலச் சிறந்த முறையாகும். அதை நாம் 4 வகையாகப் பெறலாம். 1. பார்த்துக் கற்றுக் கொள்வது 2. படித்துக் கற்றுக் கொள்வது 3. அனுபவப்பட்டு கற்றுக்கொள்வது 4. தவறா சரியா என்று சோதித்துக் கற்றுக் கொள்வது அதிகமாகப் படிப்பதால், ஆசிரியரது போதனைகள், அறிவுரைகள், அனுபவங்கள் பலவற்றை, விரைந்தும் எளிதாகவும் கற்றுக்கொள்ள முடியும் என்பதால் தான், 'கண் டதைக் கற்க பண்டிதன் ஆவான்’ என்ற பழமொழியை நமக்குத் தந்திருக்கின்றார்கள். அறிவு என்பது நாளுக்கு நாள் சேர்ந்துகொண்டே வருவதாகும். ஒரு மனிதன் வளர்ந்திருக்கின்றான் என்றால், அறிவும் நிறைய வளர்ந்திருக்க வேண்டும்.