பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் 19 அப்படிப்பட்ட அறிவாளியைத்தான் வயதான காலத்தில் பழம் என்கிறோம். - அறிவில்லாமல் முதிர்ச்சியடைந்த வயதானவர் களைக் கிண்டல் செய்வது போலக் கிழம் என்று கூறுவதும் இதனால்தான். பனிமலையின் உச்சியில், ஒரு சிறு பனிக் கட்டி உருண்டு, கீழே வரத்தொடங்குகிறது. அது உருண்டு வருகிறபோதே, பனித்துகள் கண்ள தன் மீது ஒட்டிக் கொண்டு உருண்டு வருகிறது. பனித்துகள்கள் சேரச்சேர, அந்தப் பனிக் கட்டி பெரியதொரு பனிப்பாறையாக மாறி அடிவாரத்தில் வந்து விழுகிறது. பனிக்கட்டி என்பது குழந்தை காலம். பனிப்பாறை என்பது முதிர்ந்த கர்லம். இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உடல் வளருவதுபோல அறிவும் தொடர்ந்து வளரவேண்டும் என்றால், கற்கும் செயலையும் கருத்துடன் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நீங்கள் படிப்பதை நிறுத்துகிறபோது, உங்களுக்கு முதுமை விரைந்து வந்துவிடுகிறது என்பது ஒரு பழமொழி. ஆகவே, Learning என்ற வார்த்தை கற்றால்தான் மேன்மை பெறலாம், மேன்மை அடையலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. -