பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் - 21 தந்து, துண்டுகிற ஒரு தூண்டுதல் வேண்டும் என்பதைத்தான், இந்த இன்ஸ்பிரேசன் (Inspiration) என்ற சொல் நம்மைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. 3. வலிமை வாய்ந்த தகுதி: (Fitness) வலிமையே வாழ்வு, பல ஹீனம் மரணம் என்று விளக்கம் தருகிறார் வீரத் துறவி விவேகானந்தர் அவர்கள். மனிதன் என்றாலே வலிமையானவன் என்பதுதானே பொருள். உலகத்தில் வாழும் தன்னைவிட வலிமையுள்ள மிருகங்கள் மற்றும் உலக சூழ்நிலையை தனக்குக்கீழ் வைத்துக்கொண்டு, வாழ்கிற ஆற்றல் கொண்டவன் அல்லவா மனிதன். ஆகவே, வாழ்க்கையை வளமாக வாழ்வதற்கு, வலிமை வேண்டும் என்பதைத் தான் பிட் நெளில் (Fitness) வலியுறுத்துகிறது. வலிமையை உடல் வலிமை என்றும், மனவலிமை என்றும் பிரிக்கலாம். மனவலிமை இன்றி உடல் வலிமை மட்டும் உள்ள ஒருவன் முரடனாக முட்டாளாக வாழ்கிறான். மரம் என்று அவனுக்குப் பெயர். மனவலிமை நிறைந்து, உடல் வலிமை இழந்து கிடப்பவன் சோம்பேறியாக, நோயாளியாக, எதையும் சாதிக்கமுடியாத சக்தியற்றவனாக வாழ்ந்து, வீணாகிப் போகிறான். - ஆகவே ஒரு நாணயத்திற்கு இரண்டுபக்கமும் நன்றாக இருந்தால்தான் செல்லுபடியாகும் என்பது