பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா போல; இரண்டு வலிமையும் இருந்தால்தான், எண்ணியதில் திண்ணியராக, வெற்றிகரமான காரியங்களைப் பண்ண முடியும் என்ற வாழ்க்கைக் குறிப்பு, நமக்கு வழிகாட்டுகிறதல்லவா! 4. 560solā ālpstold (Education) கற்றுக் கொள்வது மட்டும் போதாது. தன்னைத் தானே தூண்டிக் கொள்கிற ஆர்வ உணர்வுமட்டும் போதாது. மனவலிமை, உடல்வலிமை மட்டும்போதாது. இவற்றுடன், செய்யும் தொழிலை சிறப்பாகச் செய்து முடிக்கக் கூடிய திறமையும் வேண்டும். செய்யும் தொழிலை தெய்வம் என்று எண்ணி விட்டால் மட்டும் வெற்றி வந்துவிடாது. செய்யும் தொழிலான அந்தத் தெய்வத் தொழிலின் நுண்மையை, நுட்பத்தைப்புரிந்து கொண்டு, அதற்கு அடிப்படையாக உள்ள திறமைகளின் கூறுகளைக் கற்று வளர்த்துக் கொள்ள வேண்டும். இதையே கல்வித் திறமை என்கிறோம். திறமை இல்லாத தொழில் எதுவும் முடிவைத் தராது. நல்ல விடிவையும் தராது. இப்படியாக "லைப் (Life) என்ற சொல், நாம் எப்படி வாழ வேண்டும் என்ற வழிமுறைகளைத் தொகுப்பாகக் கொண்ட எடுப்பான சொல்லாக விளங்குவதைப் பார்த்தீர்கள். - பிறர் வணங்குகிற பெருமை பெற்று வாழ வேண்டுமானால், நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும்.