பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 27 இப்படித்தான் மனித வாழ்க்கையின் மகத்துவம் அமைந்திருக்கிறது. உடலில் உள்ள சக்தி என்ற சுவையான ஐஸ் கிரீமை, மனிதன் என்ற சக்திக்குச் சொந்தக்காரன். பயன்படுத்தாமல், சோம்பேறியாக இருந்து நேரத்தை வீணாக்கிவிடுகிறான். காலம் கடந்துபோனபிறகு, சக்தியும் சிதைந்து கெம்பீரம் இழந்து போகிறபோது, வாழ்க்கை வாழ்ந்தாக வேண்டும் என்று மனிதன் முனைகிறபோது, அவனது நப்பாசை மற்றவர்களின் நகைப்புக்கு இடமாகிவிடுகிறது. அவனும் நலிந்து, தன் வாழ்வைத்தானே நாசமாக்கிக் கொண்டு தவித்துத் தத்தளித்து தடுமாறி, நிலைமாறி தரம்கெட்டு அழிகிறான். ஆமாம் சீரழிகிறான். அதனால்தான், வாழ்க்கையை வீணாக்கக்கூடாது. ஒவ்வொரு நாளையும் பயன் மிக்க நாளாகக் கழிக்கவேண்டும். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடக்கூடாது என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். ராமகிருஷண பரமஹம்சர் வாழ்க்கையிலே, ஒரு உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சி. கடவுளை, அவர் அன்புக்குரிய காளிதேவியை, கண் முன்னே அவர் கண்டாகவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் என்ன சொல்லி ஜெபித்து, மன்றாடி வேண்டிக்கொண்டார் என்பதை அறியும்போது தான் நமக்கு அதிசயமாக இருக்கிறது. 'ஏ மாதாவே! நான் உன்னிடம் எதையுமே கேட்கவில்லை. உன்னைப் பார்க்க வேண்டும் என்றே