பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து-நில்-துணிந்து-செல்- 29 கொள்ள வேண்டும். அமைதியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு கோன் ஐஸ்கிரீம் ஆகும். அதை நேரத்தில் நக்கிச் சுவைக்க வேண்டும். சுவைக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இந்தப் பழமொழியை நாம் மறந்துவிடவே கூடாது. ஆமாம், இது ஒரு பால பாடம். சிக்கலான சீட்டாட்டம் சீட்டாட்டத்தை ஒரு மோசமான சூதாட்டம் என்பார்கள். சொத்துக்களை மட்டுமல்ல, ஜீவனையே அழிக்கும் மதி மயக்கும் ஆட்டம் என்றும் சொல்வார்கள். சீட்டாட்டத்தில் தோற்பதுதான் சிறந்த முடிவாக வரும் சீட்டாடி ஜெயித்தவர்கள் யாருமே இல்லை என்பதுதான் சரித்திரம். ஆனால், சீட்டாட்டத்தில், தோற்கத் தோற்கத்தான், விளையாட வேண்டும். விளையாடியே தீரவேண்டும் என்ற வேகமும் வெறியும் ஏற்படும். அதனால்தான் சூதாடிகள் இரவு பகல், உணவு உறக்கம், மனைவி மக்கள், வேலை விவகாரம் என்று எதன் மேலும் நினைவே இல்லாமல், ஆடிக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு ஆட்டம் பற்றி, இங்கே எழுதித்தான் ஆகவேண்டுமா என்ற கேள்வி, உங்களுக்குள்ளே எழுந்தால், அது நியாயமான கேள்விதான். நமக்கு நல்ல விஷயங்கள் எங்கு கிடைக்கின்றனவோ, அங்கு சென்று, தேவையானதை