பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மட்டும் தேடித்திரட்டிக் கொள்வதுதான் புத்திசாலித் தனம். சீட்டாடத்தில் ஒரே ஒரு குறிப்புதான் மிகவும் முக்கியமானது. ஒவ்வொருமுறை ஆட்டத்திலும், சீட்டுக்கள் கலைத்து போடப்பட்டு, கைக்கு வருகிறபோது, எத்தனை சீட்டுக்கள் உண்டோ ஒவ்வொருவருக்கும், அத்தனை சீட்டுக்கள் தான் வரும். ஆனால் வித்தியாசம் உண்டல்லவா! தன் கைக்கு வந்திருக்கும் சீட்டுக்களின் தன்மையை வைத்துக் கொண்டு, புத்தி சாலித்தனமாக ஆடவேண்டும். ஆஹா எதிர்பார்த்த சீட்டு வரவில்லையே என்று ஆதங்கப்படுவதால், இந்த மாதிரி வந்திருந்தால் இப்படி ஆடியிருப்பேன் என்று வராததற்காக வருத்தப்படுவதால், வாய் ஜம்பம் அடிப்பதால், வெற்றி வந்துவிடாது. வராத சீட்டுக்காக வருத்தப்படாமல், வந்த சீட்டுக்களை வைத்துக்கொண்டு, புத்திசாலித்தனமாக விளையாடி வெற்றிபெறவேண்டும் என்பதுதான் சீட்டாட்டத்தின் முக்கிய குறிப்பாகும். எப்படி? நாம் விரும்பியது எதுவும் வாழ்க்கையில் நடப்பதுமில்லை. அடிக்கடி வருவதுமில்லை. வந்தாலும் நிலைத்திருப்பதில்லை. விரும்பாத நிகழ்ச்சிகள் ஏற்பட்டுவிடுவதால், நாம் விலகி ஓடி விடுவதுமில்லை. வெறுத்து படுத்துக் கொள்வதுமில்லை.