பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் - 31 முடிந்தவரை சமாளித்து, எதிர்நீச்சல் போட்டு, சக்தியை சேகரித்து தந்திரங்களை பயன்படுத்தி, சாதிக்க முயல்கிறோம். அதுதான் மனித சாதியின் மகிமை மிக்க ஆற்றலாகும். எதையும் சாதிக்க வேண்டும், சரித்திரம்படைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், எந்த சந்தர்ப்பத்திலும் தன்னை இழந்து போகாமல், சிந்தித்து, சிறப்பாக செயல்படுவார்கள். ஆகவே, சிக்கலான சீட்டாட்டத்தில் உள்ள நுண்மையான இந்தக் கருத்தை நம் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு சீட்டாட்டம் போன்றது. அதில் வந்த சீட்டுக்களை வைத்துக்கொண்டு, வெற்றி பெற முயல்வதுதான் விவேகம். வராத சீட்டுக்களுக்காக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறவன், தோற்பது உறுதி. அவன் ஜெயிப்பதற்கான சந்தர்ப்பமோ, சந்தோஷமோ ஏற்படவும் ஏற்படாது. - நாம் நமது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டாமா? இது ஒரு வாலிபப் பாடம். பழைய ஆடை வாழ்க்கை என்பது ஒரு பழைய ஆடை போன்றது. அதில் ஓரிடத்தில் கிழிந்து போகிறபோது நாம் தைக்க முயல்வோம். தைத்து முடிந்து, தலைநிமிர்கிறபோது, மறுபுறம் கிழிந்து கொள்ளும். இப்படித் தைக்கத் தைக்க கிழியும் பழைய ஆடை போன்றதுதான் நமது வாழ்க்கையும் என்பார்கள் அனுபவசாலிகள்.