பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அறிவு வளரப் பாடுபடுகிறார்கள். இருக்கும் அறிவு போதாதோ! நாம் முட்டாளாகிக் கிடக்கிறோமோ என்ற சந்தேகப் பயம். புகழ் பெற பாடுபடுகிறார்கள். நம் புகழை மற்றவர்கள் அழிக்க குழிதோண்டி விடுவார்களோ என்ற பொறாமைப் பயம். - வெற்றி அடைய உழைக்கிறார்கள். தனது வெற்றியைப் பற்றி மற்றவர்கள் பொறாமை அடைந்து, - பெரிய சதி எதுவும் செய்து விடுவார்களோ என்ற பயம். இதற்கும் மேலே எல்லோருக்கும் பெரிய பயம் ஒன்று இருக்கிறது. அதாவது இந்த உடலுக்குள்ளே இறப்பு என்ற ஒன்று எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறதே! என்று வருமோ! தலையணை ஒரமாகவே இந்த இறப்பு அமர்ந்திருந்து தவம் செய்கிறதோ என்கிற தவிப்பு இருக்கிறதே, மனிதர்களுக்கு உள்ள பொல்லாத தவிப்பு அது. ஏன் பயம் வருகிறது என்றால், அதற்கு தன்னம் பிக்கை இல்லாததுதான் காரணம். தன்னம்பிக்கை என்பது அதிகமான தேவைகளும், ஆசைகளும் வந்து ஒருவரைக் குழப்புகிறபோதுதான் அழிந்துபோகிறது. பிறர் வணங்கும் பெருமையோடு வாழவேண்டு மானால், தன்னைப் பற்றிய நம்பிக்கை மிகுதியாக வேண்டும். தன்னைப்பற்றிய நம்பிக்கை எப்பொழுது குறையாமல் வரும்? தன்னிடம் உள்ள சக்தி என்ன?