பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து-தில்-துணிந்து-செல் 35 தன்னிடம் உள்ள திறமை என்ன என்று தெரிந்து கொள்கிறபோதுதான் வரும். தன்னிடம் உள்ள தகுதி, திறமை, சக்தி என்ன? எவ்வளவு இருக்கிறது என்று ஒருவன் கண்டுபிடித்து விட்டால், அவன் எந்தவித சிரமமுமின்றி, முன்னுக்கு வந்துவிடுவான். இதைத்தான் பஞ்சதந்திரம் ஒரு நீதியாகப் போதிக்கிறது. “தனது திறமை என்ன என்று ஒவ்வொருவனும் சிந்தித்து, கண்டறிந்துவிடவேண்டும். அவ்வாறு கண்டறிவது மிகவும் கடினம். அந்தக் கடின வேலையில் முயன்று, தனது திறமை என்ன என்று கண்டறிந்து விட்டால் அவன் எதையுமே வென்று விடுவான்.” இந்த வரிகள் யாவும் உபதேசம் அல்ல. பிரசங்கமும் அல்ல. உண்மை வாழ்க்கைக்கு உதவிடும் உன்னத வார்த்தைகள். உதவவரும் ஒப்பற்ற வழிகாட்டிகள்.

  • عه / N A \ | ! W o \ A. NJ ് ¿?

ص نے بے حه