பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 37 நான் இப்படித்தான் எதிர்காலத்தில் இருப்பேன்? என்று மனதுக்குள்ளே முடிவெடுத்துப் பார்த்துக் கொள்வதுதான் முன்னோக்கு என்பதாகும். எனது வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கிறது என்று நான் உங்களுக்கு சொல்லியாக வேண்டு மல்லவா? நான் எனக்காக இப்படி எழுதிவைத்துக் கொண்டு, தினம் உழைக்கிறேன். செயல்படுகிறேன். நேற்று நான் தீட்டிய திட்டத்தின்படி, இன்று நான் சந்தோஷமாக செயல்படுகின்றேன். நாளை நான் நல்லபடியாய் முன்னேறியிருப்பேன் என்று நான் சந்தோஷமாக இன்று செயல்பட்டு வாழ்ந்து கொள்கிறேன். இறந்து போன காலத்திற்காக, வருந்திக் கொண்டிருக்கும் மக்களைத்தான் நாம் தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தைப் பற்றிப் பயந்து, பயந்து பதறிக் கொண்டிருக்கிற மக்களைத்தான் நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு என்ன செய்வது என்று எதுவும் தெரியாமல், ஏதும் புரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிற மக்களைத்தான் நாம் பார்த்துப் பார்த்து அலுத்துக் கொண்டிருக்கிறோம். உழைக்கத் தயங்குபவர்கள் உருப்படவே மாட்டார்கள்.