பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உழைப்பதற்காக فالاتا أي தீட்டாதவர்கள், உறங்கத்தான் முயற்சிப்பார்களே தவிர, சுறுசுறுப்பாக இயங்க மாட்டார்கள். திட்டம் தீட்டுவது என்றால் என்ன? வாழ்க்கையில் முன்னேற்றமடைவதற்குரிய வழிவகைகளை சிந்திப்பது; சுலபமாக வெற்றி வாயிலை அடையக்கூடிய சிந்தனையில் செயல்படுவது! மனிதன் என்பதற்குரிய அடையாளம் என்ன? தினம் தினம் சிறிதளவாவது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து கொண்டிருப்பவன்தான் மனிதன்; 'மனிதன் என்பவன் வாழ்க்கையிலே முன்னேறிச் செல்பவன்தான். பிணிகள் இல்லாமல் எதிர்ப்புகளை போராடி வெல்பவன்தான். என்று நான் எழுதி, இசையமைத்துப் பாடிய வரிகளை இங்கே உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். 'முன்னோக்கிப் பார்! உன் - முன்னேற்றம் பார்.' என்று எழுதிய வரிகளையும் இங்கே குறிப்பிடுகின்றேன். - முன்னோக்கிப் பார்க்கின்ற உணர்வு வருகின்ற மனிதர்களே, வாழ்க்கையில் முன்னேறுகின்றார்கள். முன்னோக்கிக் காரியம் ஆற்றுகின்ற மனிதர்களே, வாழ்க்கையில் தலைமை நிலையை அடைகின்றார்கள்.