பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் 39 முன்னோக்கிப் பார்க்கின்ற வேகம் வந்துவிடுகிற போது தானாகவே விவேகம் வந்துவிடுகிறது. விவேகம் வந்துவிடுகிறபோது, வியூகம் அமைத்து செயல்படுகிற, விவரமான சாமர்த்தியம் வந்து விடுகிறது. இப்படி பாஸிடிவ் திங்கிங் என்கிற நடக்கும் என்ற நம்பிக்கை உணர்வுகளைக் கொண்டிருக்கிற மனிதர்கள்தான், பிறர்போற்றும் பெருமிதம் நிறைந்த வாழ்க்கையைப் பெறுகின்றார்கள். நெகடிவ் திங்கிங் என்கிற எங்கே நடக்கப் போகிறது என்று எண்ணுகிறவர்கள் யாராக இருந்தாலும், வீழ்ந்துபோகிறார்கள். தாழ்ந்துபோகின்றார்கள். தணிந்து போகின்றார்கள். தரித்திரத்தால் கிழிந்து போகின்றார்கள். ஏனென்றால், தன்னைத்தானே தரைமட்டமாக்கிக் கொள்கின்ற வாழ்க்கை நம்பிக்கையற்றவர்களிடம் தான் நிறைய இருக்கிறது. என்னால் முடியாது! என்னால் எங்கே முடியப்போகிறது? என்று தன்னம்பிக்கையற்று ஒருவன் பேசும்போது, அவன் மூளையில் தடித்தனம் வந்துவிடுகிறது. தடித்தனம் என்பது மடத்தனம், மடத்தனம் என்றால், சிந்திக்கும் திறமை மடங்கிப் போய் முடங்கிப்போய் மடிந்துபோய்விடுவது. இங்கே ஒரு கருத்தை நீங்கள் கருத்தாகக் கவனிக்க வேண்டும். - - * * *