பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஐயோ! வீடு முழுவதும் இருட்டாகக் கிடக்கிறதே என்று இருட்டிலே நின்றுகொண்டிருப்பதைவிட, ஒரு அகல் விளக்கையோ, ஒரு மெழுகுவர்த்தியையோ ஏற்ற முயலவேண்டும் என்கிறது ஒரு பழமொழி. இருட்டாகிக் கிடக்கிறதே என்று ஏங்கிப் போய் நின்றால், வீட்டுக்கு வெளிச்சம் எப்படி வரும்? இருட்டை விரட்டும் முயற்சிக்குத்தான், அறிவுடைமை என்று பெயர். அதுபோல வாழ்க்கையில் வருகிற துன்பங்களை, துயரங்களை, மனக்கஷடங்களை, பணத் தொல்லைகளை, எதிர் வரும் இன்னல்களை, சதிராடும் சவால்களை எல்லாம் இருட்டு என்றே சொல்லலாம். சங்கடங்கள் வந்துவிட்டனவே என்று தலையைத் தொங்கப் போட்டுக் கொள்வதால், சாதித்துவிடமுடியுமா என்ன? அதனால்தான், வீட்டுக்கு வெளிச்சம் வர ஒரு மெழுகுவர்த்தியைத் தேடுவதுபோல, வாழ்க்கைக்கு வெளிச்சம்வர, முன்னோக்கிப் பார்க்கும் முயற்சிகள் வேண்டும். நாம் எப்படி முன்னேற்றம் பெற வேண்டும் என்றும் சிந்திக்க வேண்டுமல்லவா? அது தானே மனிதத்தனம். நாம் பேசத் தெரியாமல், சிந்திக்கத் தெரியாமல், சிரிக்கத் தெரியாமல் வாழ்ந்தால் அதை மாக்கள் என்பார்கள்.