பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் 43 யானை மேல் ஏறி உட் கார்ந்துகொள்ள நாம் நினைக்கிறபோதே, நமக்கு ஒரு புது சந்தோஷம், பொங்கும் ஊற்றாக சுரந்து கொள்கிறது. யானை மேல் ஏறிக்கொள்வது எப்படியெல்லாம் சாத்தியமாகும் என்று சிந்தனை செய்து திட்டமிடுகிறபோதே சந்தோஷத்துடன், சாமர்த்தியமும் சேர்ந்துகொள்கிறது. - புதுத் தெம்புடன் யானையை அணுகும்போது, நம்மையறியாமல் பயம் பறந்துவிடுகிறது. நமக்குள்ளே இருக்கிற வலிமை, நமக்குத் தெரியாமல் வளர்ந்து, வானத்திற்கும் பூமிக்கும் வளர்ந்த அனுமார் போல விஸ்வரூபம் எடுத்துக்கொள்கிறது. இவையெல்லாம் நடந்து, யானைமேல் ஏறி அமர்ந்துகொண்டால், கிடைப்பது அளவற்ற ஆனந்தம். முடியாமற் போனால், என்ன? இத்தனை நாள் அனுபவித்த சந்தோஷம் போதுமே! வளர்த்துக்கொண்ட வலிமை போதுமே! இப்போது தோற்றதால் கிடைத்த அனுபவம் போதுமே அறிவாற்றல் போதுமே! இப் படித்தான் எண்ணிக் கொள்ள வேண்டும். அப்போதுதான், மனமும் உடலும் புதுப்புது வழிகளை ஆராயவும், புதுப்புது முயற்சிகளை மேற்கொள்ளவும் கூடிய உற்சாகத் தைப் பெறுகிறது. உத்வேகத்தை அடைகிறது.