பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இந்த இலட்சியவெறி எப்போது தணியும்? எப்படி தணியும்? அதற்கு எப்படித் தீனிபோடமுடியும் என்றால், அது தனக்குள்ளே இருக்கிற திறமையைக் கண்டுபிடித்துக் கொள்ளும்போதுதான். 'உனக்குள் இருக்கும் திறமையை உணர்ந்தே புரிந்து கொள்! கணக்காய் அத்திறமையை வளர்த்து, கடமையில் சேர்த்துக்கொள்! உன் கடமையும் ஜொலிக்கும் செய்யும் காரியம் பலிக்கும்.' என்று நான் எழுதிய பாடலை இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். உன் திறமையைப் புரிந்து கொள் என்பதைத்தான், உன்னையே நீ உணர்ந்து கொள் என்று பெரியவர்கள் சொன்னார்கள். உன்னிடம் உள்ள திறமையை நீ உணர்ந்து கொள்கிறபோது, நீ எங்கே நிற்கிறாய்? நீ எந்தத் திசை நோக்கிப் போகலாம்? எவ்வளவு தூரம் நடக்க முடியும்? எந்த லட்சியத்தை சாதித்துவிடமுடியும் என்பது புரிந்துவிடும். ஒரு மேல் நாட்டுப்பெண், ஆய்வு நடத்துவதற்காக, இந்தியாவுக்கு, வந்து ஐந்து ஆண்டுகாலம் தங்கியிருந்து, வந்தவேலை முடிந்தபிறகு, தன் தாயகத்திற்குப் புறப்பட்டாள். அந்தப் பெண்ணிடம், இந்திய மக்கள் பற்றி, உங்கள் கருத்து என்ன என்று ஒருவர் கேட்டார். அதற்கு அந்தப்பெண் அளித்த பதில் இப்படி இருந்தது.