பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அதனை மேல் நோக்கித் தள்ளி, வெளியே போக வைத்தன. இவ்வாறாக, ஒவ்வொரு நண்டாக, அண்டாவிலிருந்து வெளியேறிச் சென்றன. இப்போது, இந்திய நண்டுகளைப் பாருங்கள் என்று, அடுத்த அண்டாவைக் காட்டினான். அண்டாவின் மேல் பகுதியில் இருந்த ஒரு நண்டு, வெளியே வர முயற்சித்த உடன், மற்ற நண்டுகள் அதன் கால்களை இழுத்து, உள்ளுக்குள் நிறுத்திவைத்தன. இப்படி எந்த ஒரு நண்டு வெளியே வர முயற்சித்தாலும், மற்ற நண்டுகள், இழுத்து நிறுத்தின! பார்த்தவர் புரிந்து கொண்டார். இப்படி ஒரு ஜோக். இந்தியாவில் ஒருவன் முன்னேறிவந்து விடுகிறான் என்றால், அவன் பூமியிலுள்ள இழுப்பு சக்தியையும் மிஞ்சிய பொதுமக்களின் இழுப்புச் சக்தியை வென்று வந்திருக்கிறான் என்றே அர்த்தம். அவனிடம் இருந்த பொறுமை, திறமை, துணிவு, அறிவு, விடாமுயற்சி எல்லாவற்றையும் பயன்படுத்தியே முன்னேறியிருக்கிறான் என்பதே பொருள். குறுக்கு வழியில் வந்தவர்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. அவர்கள் திடிரென மேலே வந்து, திடிரென வீழ்ந்து மடியும் பேர்வழிகளாகிப் போகின்றார்கள். உண்மையாக, நல்ல முறையில், மற்றவர்கள் மதித்து, வணங்கிப் போற்றுகின்ற பெருமையைப் பெற, உழைப்பால், உண்மையோடு உறுதியாக முன்னேறிய வர்களையே, உலகம் காலங்காலமாகப் போற்றுவதால் நாம் நேரான வழிகளையே நினைப்போம். நடப்போம்.