பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 49 நமக்கு திறமை இருக்கிறது, நமக்கு சிறப்புவரும் என்ற நம்பிக்கை நிறைய பேர்களுக்கு இல்லை. ஏனென்றால், அவர்கள் தாங்கள் பிறந்தது எப்படி என்று தெரியாத மனிதர்களாக இருக்கின்றார்கள். உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஓட்டத்தில் ஜெயித்த வீரன் என்பதாக நான் எழுதுவதுண்டு. கூட்டங்களில் பேசுவதும் உண்டு, என்பதை நான் இங்கும் எழுத விரும்புகிறேன். தந்தை ஒருவன் அனுப்புகின்ற விந்தானது தாய்க் கர்பப்பையை நோக்கிப் போகிறது. அந்த விந்தில், 220 மில்லியன் ஜீவ அணுக்கள் இருக்கின்றன. அத்தனை ஜீவ அணுக்களும் தாய்க் கர்பப்பையை நோக்கியே 8 மணிநேரம் ஓடுகின்றன. ஒரு ஜீவ அணு முதலில் தாயின் கர்பப்பைக்குள் நுழைந்தவுடன், கர்பப்பையின் கதவு மூடிக்கொள்கிறது. உள்ளே நுழைந்த முதல் ஜீவ அணுதான், கருவாக மாறி, குழந்தையாக வளரத் தொடங்குகிறது. கருவறைக்குள் முதலில் போக முடியாமல், பின்தங்கி மெதுவாக ஓடிவந்த மற்ற ஜீவ அணுக்கள் எல்லாம் செத்துப் போய் விடுகின்றன. இது தான் மனித பிறப்பின் கதை. முதலில் வேகமாக ஓடி வந்து, முதலாவதாக வந்து, ஜெயித்த ஜீவ அணுவிலிருந்துதான் ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்.