பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா வெற்றி பெற்ற ஜீவ அணுவிலிருந்து விளைந்த மனிதர்கள், எப்படி திறமையில்லாமல் இருக்கமுடியும்? எப்படி வலிமையும், செழுமையும் இல்லாமல் இருக்கமுடியும்? திறமை இருக்கிறது, என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா! உங்களிடம் உள்ள திறமை என்ன என்று நீங்கள் கண்டுபிடித்துக் கொண்டு விட்டால், வளர்த்துக் கொள்வது எளிது. மிக எளிது. ஏனென்றால், இருக்கும் திறமையைக் கண்டு பிடித்த உடனேயே, எப்படி செயல் படமுடியும் என்ற சிந்தனையும், முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டு விடுகிறதே! 'எவரும் துணைக்கு வரமாட்டார் - உன் ஏழ்மையைப் போக்கவும் விடமாட்டார்.” இதுதான் உண்மையான சூழ்நிலை. முன்னேற விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்பாகும். சுற்றம், உறவு, பந்தம், பாசம், சொந்தம் என்றெல்லாம் கூறுகிற கூட்டம் ஒன்று என்றும் நம்மிடையே இருக்கிறது. நம்மைச்சுற்றி படர்ந்துகொண்டிருக்கிற மக்களைத் தான் சுற்றம் என்றனர். அது பந்தமாக எரிந்துகொண்டு, எரித்துக்கொண்டு இருக்க, அதை நாம் தம்பிடித்து ஏற்றுக் கொள்கிறோம்.