பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 55 6. முயற்சிதான் முக்கியம் உங்களுக்குள்ள திறமை என்ன என்று கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அந்தத் திறமையை எப்படியெல்லாம் வளர்த்துக் கொள்ளமுடியுமோ, அதற்கான வழிகளை அறிந்து, வாய்ப்புக்களைப் புரிந்து, வகைகளைத் தெரிந்து முயற்சியுங்கள். திறமை என்னவென்று தெரிந்து கொண்டாயிற்று. வாய்ப்புக்கள் உள்ள வழிமுறைகளையும் புரிந்து கொண்டாயிற்று. அதனை எப்படி செயல்படுத்திட வேண்டும் என்று நாம் இப்போது சிந்திப்போம். தெளிவு கொள்வோம். வாழ்க்கை என்பதை வியாபாரம் என்று கூறுவார்கள். ஒவ்வொருவரும் தங்களது சரக்கை விற்று, தங்களுக்குத் தேவையான பொருளைப் பெற்றுக் கொள்வதாகவும் கூறுவார்கள். இதிலே உள்ள ரகசியம் என்னவென்றால், உலகில் பிறந்த ஒவ்வொருவரும், தங்களை வெளிப்படுத்திக் கொள்ள, முன்னணியில் நிற்க, பெருமைகள் பெற, புகழ் அடையவே விரும்புகின்றார்கள். அதனால், தங்களுக்குரிய திறமையை மற்றவர்களிடம் விற்று, பேரும் புகழும், பெருமையும் மகிமையும் வாங்கிடவே முயற்சிக்கின்றார்கள். அதனால், உலகில் பிறந்த ஒவ்வொருவரும் சிறந்த வியாபாரியாகவே, வாழ்ந்திட முயற்சிக்கின்றார்கள் என்பதுதான் உண்மையாகும். -