பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஒருபொருளை வாங்கவே, சமயோசிதப்புத்தியும், சாமர்த்தியமான சக்தியும் வேண்டும் என்கிறபோது. ஒரு பொருளை மற்றவர்களிடம் விற்க, எவ்வளவு சாமர்த்தியம் தேவைப்படுகிறது தெரியுமா? வியாபாரம் என்றால் என்ன? வியாபித்திருக்கும் பாரம் என்று பெயர். அதாவது, அந்த நினைவுகளே, அவரது இதயத்திலே நீக்கமற நிறைந்து என்றும் கனத் தோடு உலாவிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். ஒரு வியாபாரி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, ஒரு சிறுகதை ஒன்றைக் கூறுவார்கள். ஒரு பிரபலமான வியாபாரி ஒருவர், ஒரு பெரிய பல சரக்குக் கடைக்குச் சொந்தக்காரர். வயது 60க்குமேல் அவருக்கு 5 குமாரர்கள். 20 வயது முதல் 35 வயதுக்குள்ளேயே உள்ள வாலிபர்கள். எல்லோரும் அவருக்கு உதவியாளர்களாக இருந்து, வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருப்பவர்கள். அந்த வியாபாரி மரணப்படுக்கையில் கிடக்கிறார். எல்லா மகன்களும், அவர் மனைவியும்தான், அவரது கட்டிலைச்சுற்றி, கண்கலங்கியவாறு நிற்கின்றார்கள். இன்னும் கொஞ்சநேரத்தில் உயிர் பிரிந்துவிடும் என்ற சூழ்நிலை. கிழவரோ கண்ணை மூடியபடிகிடக்கிறார். மேல்மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது. கிழவர் கண் களைத் திறந்து பார்த்தபிறகு, அவர்முகம் தெளிவடைவதற்குப் பதிலாக, சுருங்குகிறது. அவர் முகபாவனை, அவரது மனைவிக்குப் புரிகிறது.