பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் 57 என்ன வேண்டும் என்று கேட்கிறாள். அவர் பேசியபேச்சு எல்லோரையும் அப்படியே சிலையாக நிற்கவைத்து விட்டது. 'நீங்கள் எல்லோருமே வந்துவிட்டீர்களே! கடையை யார் பார்த்துக் கொள்வது?’ என்றார். தன்னைவிட, தன் வியாபாரத்தையே பெரிதாக எண்ணினார் அந்தப் பிரபல வியாபாரி, என்பதையே நாம் புரிந்து கொள்ள முடிகிறது. வியாபாரம் என்பது ஒரு தொழில்தான், அதைவிட, அதை ஒரு அற்புதக்கலை என்றுதான் கூறவேண்டும். செய்கின்ற தொழிலை தெய்வமாக மட்டும் நினைத்து விடாமல், தெய்வத்தை எப்பொழுதும் சிந்தையில் வைத்திருப்பதுபோல, தொழில் நினைவுகளையும் மனதில் எப்போதுமே கொண்டிருப்பவன்தான் நல்ல வியாபாரியாவான். அது போலவே, பிறர் போற்றும் பெருமைபெற வேண்டுமானால் தன்னைப்பற்றி நினைவுமட்டுமல்ல; தான் செய்யப்போகின்ற, செய்கின்ற, முயற்சிக்கின்ற காரியத்தின் மேலேயே கருத்தானது நீக்கமற நிறைந்து இருக்கவேண்டும். அந்தக் கருத்தோட்டமும், கண்ணோட்டமும், செயல் ஊக்கமும் இருக்கிறபோதுதான், ஒருவரால் உயரமுடிகிறது. மற்றவர்களைவிட மேம்படமுடிகிறது. வியாபாரியின் மனதிலே, சதா தொழிலைப்பற்றியே சிந்தனை வேண்டும் என்றோம். நினைப்புமட்டும்