பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இருந்தால்போதுமா? நெருப்பாக செயல்படுகிற யுக்தி வேண்டும். தந்திரம் வேண்டும். ஒருபொருளை எப்படி விற்பது? எப்படி வாங்குவது என்று ஒரு வியாபாரிக்குத் தெரிந்திருக்க வேண்டும். அழுதுகொண்டே ஒரு பொருளை அடுத்தவரிட மிருந்து வாங்க வேண்டும். சிரித்துக்கொண்டே அந்தப்பொருளை விற்கவேண்டும். ஒருவரிடமிருந்து ஒரு பொருளை விலைக்கு வாங்குகிறபோது. 'அய்யா! இவ்வளவுவிலை என்றால் நான் எப்படி வாங்குவது? இதை எத்தனை ரூபாய்க்கு நான் விற்க முடியும்? இதில் என்ன லாபம் கிடைக்கும்? எப்படி என் பிழைப்பு நடக்கும்' என்று சாதுர்யமாகப் பேசி, அழுவதுபோல நடித்து, குறைந்த விலைக்கு வாங்கவேண்டும். அந்தப்பொருளை பிறரிடம் விற்கும்போது, 'நீங்கள் என்ன? எவ்வளவு பெரிய ஆள்? இது ஒரு விலையா! உங்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அழகாக இருக்கிறது' என்று புகழ்ந்து பேசி, சிரிப்பூட்டி விற்றுவிட வேண்டும். இந்தத் திறமைதான், வியாபாரத்திற்கு மிகமிக வேண்டிய ஒன்றாகும். அதுபோலவே, தனது திறமையை மற்றவர்களிடம் விற்கும்போதும், வாங்கும்போதும், காட்ட வேண்டும். மிகவும் சாதுர்யமும் வேண்டும். கோபப்படுகிற வியாபாரியிடம் யாரும் போகமாட்டார்கள். ஆத்திரப்படுகிற எவனும் அன்பை இழக்கிறான். ஆதரவை இழக்கிறான்.