பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 59 ஆத்திரம் அறிவுக்கு சத்துரு என்பார்கள், அறிவுக்கு மட்டுமல்ல; அது முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டை. எவர்களிடத்திலும் கடும் பகையை உண்டுபண்ணி விடும். கால்கட்டு அது. - ஆனால், இப்படியும் நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்களே! 'கோபப்படாதவன் கோழை' என்று. கோபப்படலாம், யாரிடம்? எப்போது? எதற்காக? இதையெல்லாம் இடம்பொருள் ஏவல் என்பார்களே! அப்படி நிலையறிந்து பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். 'கோபப்படவும்கூடாது. குளிர்முகமாகவும் இருக்க வேண்டும். யாராயிருந்தாலும் நோகாமல் பேச வேண்டும் முடியக்கூடிய காரியமா இது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முன்னேறியவர்கள் எல்லாம் இப்படித்தானே வாழ்ந்து, நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக் கின்றார்கள். ஒருபெரிய நிலைக்கண்ணாடி இருக்கிறது. நீங்கள் போய் அதன் எதிரே நிற்கின்றீர்கள். உங்கள் பிம்பம் எதிரே தெரிகின்றது. நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதையெல்லாம் அந்த பிம்பமும் செய்கிறது. சிரித்தால் சிரிக்கிறது. அழுதால் அழுகிறது. கோபமாய் பார்த்தால் கோபிக்கிறது.