பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆகவே, முதுகெலும்பு வலுவாக எப்பொழுதும் இருக்க, எளிதான சில உடற் பயிற்சிகளைத் தினம் தோறும் நீங்கள் செய்துதான் ஆகவேண்டும். - அதுபோலவேதான் துணிந்து செய்யாத எந்தச் செயலும், முற்றுப் பெறுவதும் இல்லை. முறையான முடிவை அல்லது வெற்றியை அடைவதும் இல்லை. சிந்தித்துக்கொண்டே வாழ்வில் சிந்திப்போகிறோம். வாழ்வில் சின்னா பின்னப்படுகிறோம். சீர்கெட்டுச் சிதைந்து போகிறோம். வெறும் சிந்தனை, வெறும் வாயை மெல்வதைப்போல், 'நம்மாலா இதுபோலச் செய்ய முடியும்?' - என்று நினைப்பவன் சோம்பேறி. இது எல்லாம் நமக்கு ஒத்துவராது" - என்று ஒதுக்குபவன் ஏமாளி என்னாலும் இதுபோலச் செய்ய முடியும்' - என்று எண்ணித் துணிபவனே அறிவாளி. பலசாலி. உலக அரங்கில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்றுத் தங்கப் பதக்கங்களை வென்றவர்களில் சிலரின் கடந்தகால வாழ்க்கையை இங்கே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். ஊனம் என்று சமுதாயம் ஒதுக்கித்தள்ளியவர், ஒலிம்பிக் பந்தயத்தில் ஒடிப்புதிய சாதனை புரிகிறார். தங்கப் பதக்கங்களைப் பரிசாகப் பெறுகிறார். எப்படி முடிந்தது? நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை அவர்தன் நன்னெஞ் சில் வளர்த்துக் கொண்டு முயற்சிகளை மேற்கொண்டதினாலல்லவா. இதனால்தான், 'முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்' - என்றார் திருவள்ளுவர். அவரே பிறிதோர் திருக்குறளில். 'ஞாலம் கரிதினும் கைகூடும் எஞ்ஞான்றும் காலம் கருதி இடத்தார் செயின்' என்கிறார். காலம் கருதி இடத்தார் செய்து, களிப்போடும், வெற்றிச் சிறப்போடும் நீங்களெல்லாம் வாழ, இந்தச் சிறு நூல் உங்களுக்கு வழிகாட்டட்டும். - லில்லி பவனம் என்றும் அன்புடன் சென்னை - 600 017, டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா