பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பசியைப் போக்கத்தானே உணவு. அதற்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள் பலர். என்னுடைய ஆசிரியர் ஒருவர் சாப்பிட ஆரம்பித்தால் எழுந்திருக்க அரைமணி நேரம். சாப்பிட்டு முடியும் வரை யாரிடமும் சைகையில் தான் பேச்சு. பேசவே மாட்டார். இப்படி சாப்பாட்டிற்கே சம்பிரதாயங்களை வைத்துக் கொண்டு, செளகரியமாக வாழ விரும்புபவர்கள், சாதனைகளை எப்படி புரியமுடியும்? சரித்திரம் படைக்க முடியும்? மேலேகூறிய கருத்துக்களை நினைத்துப்பாருங்கள். உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ள முயலுங்கள். முடியுமா என்று கேள்வி கேட்பதைவிட முடியும் என்று நம்புங்கள். எந்தக்காரியத்திற்கும் முயற்சிதான் முக்கியம். முடிவு நம் கையில் அல்ல. நாம் உழைக்கிற உழைப்பும், நினைக்கிற நல்ல நினைப்பும் நிச்சயம் நம்மை முன்னேற்றும் என்று நம்புவோம். பிறகென்ன தயக்கம்?