பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 டாக்டர். எஸ். நவராஜ செல்லையா என்றாலும் உறுப்புக் குறைந்துபோன, மக்கள், பிறப்பிலே இழப்பு, விபத்திலே இழப்பு ஏற்பட்டு இருக்கும்போது, இழப்பு அவர்களை எந்தவித இயலாமையையும் உண்டாக்குவதில்லை. மாறாக மனதிலே உறுதியைக் கொடுத்து, வீரத்தை விளைவித்து 'அஞ்சாதே! நிமிர்ந்து நில்!” என்று உள்மனதிலே எழுச்சியூட்டி மனிதர்களை ஆற்றலுடன் பாடுபடச் செய்கிறது. கடவுள் பெருமையைப் பற்றி இப்படிக் கூறுவார்கள். 'கடவுள் ஒருவழியை அடைத்தால், ஏழு வழிகளைத் திறந்து காட்டுகிறார்' - என்று, இந்த உலகம் பெரிது. அதற்கு வாசல்களும், வளைவுகளும் பெரிது. வரவேற்கும் முறைகளும் பெரிது. முயற்சி உள்ளவர் களை ஏற்றுக் கொள்கின்ற முனைமுறியாத அனுதாப இயல்புகள் இறைவனுக்கும் இயற்கைக்கும் உண்டு. நாம்தான் இயற்கையை அணுகுவது இல்லை. இறைவனை நம்புவது இல்லை. மந்திரம் போட்டால் மாங்காய் கிடைக்குமா? தேங்காய் கிடைக்குமா என்று அலை கிறோம். நமது மனது தரத்திலே நம்பிக்கை இல்லாததால் நம்மீதே நமக்கு நம்பிக்கை எழமாட்டேன் என்கிறது. மனித மனத்தின் ஆற்றலுக்கு இணையானது உலகில் வேறு எதுவுமே இல்லை என்கிறார்கள். அறிவுள்ளவர்கள் உண்மை என்கிறார்கள். அனுபவப் பட்டவர்கள் ஆமாம் என்கிறார்கள். என்றாலும் மனிதன் தனது நம்பிக்கையிலே நிமிர்ந்து இருப்பது இல்லை.