பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 8. துணிந்துசெல் உங்களைத் துணிந்து செல் என்று உற்சாகப்படுத்து கிறேன். துணிந்து செல் என்பதற்கு, உயிரை துச் சமமாக மதித்து உழற்றுகின்ற காரியங்கள் அல்ல. உறுதியாக ஒரு நம்பிக்கையை மனதிலே ஊன்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் துணிந்து செல் என்கிறேன். நாம் வாழும் உலகத்தை மாயாலோகம் என்பார்கள். நடக்கின்ற காரியங்களை மாயை என்பார்கள். மாயை என்பது காட்சிகள் இருப்பதுபோல் இருந்து நிகழ்ந்தவை கள் எல்லாம் நினைவுகளில் இருந்து அகன்று கனவாக மாறிக் கரைந்து விடுவது. அதனால் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே மறந்து போகிற நிர்ப்பந்தத்தை உண்டுபண்ணுவது. இதை மாயாசக்தி என்பார்கள். மாயா சக்தியின் மகிமை என்னவென்றால் அடாவடியாக ஒரு காரியத்தை ஆரம்பிக்கச் செய்து, தடாலடியாகத் திடீரென்று முடித்துவிடுவது. இந்த வலைக்குள்ளேதான் ஆவேசமாக இளைஞர்கள் விழுந்து விடுகிறார்கள். எழுந்து வெளியேற முடியாதபடி நிலைதடுமாறு கிறார்கள். வளர்நிலை குலைந்து போகிறார்கள். என்ன காரணம்? உள்ளத்திலே உறுதிப்பாடு இல்லை. உறுதிப்பாடு இருந்தாலும் செயல்பாடு குறைவு செயல்பாடு இருந்தாலும் சீர் கேடுகளும் அதிகம். ஆகவேதான், உள்ளத்திலே உறுதியாக இருந்து முன்னோக்கிச் செல்வதைத்தான் துணிந்துசெல் என்கிறோம்.