பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து-நில்-துணிந்து-செல் 71 காய்த்து வெடித்தனவே தவிர பூத்துக் குலுங்கவில்லை. உணவுக்குப் பஞ்சமில்லை. உற்றார், உறவினர், நண்பர்களிடம் பெற்று இருக்கும் மரியாதைக் குக் குறைச்சலில்லை. என்றாலும் கெளரவமான வாழ்க்கை அவரைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இனி புகழ்பெற்ற வாழ்க்கை அவரை எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்பும், இதயத்தில் வைத்திருந்த நம்பிக்கையும், வயதான காலத்தில் வைத்திருக்கும் வரம்பிற்குரிய வலிமையும். அவரை மற்ற மனிதர்களிடமிருந்து பிரித்து மகாமனிதராகக் காட்டிக் காட்சியளிக்கிறது. துணிந்து செல் என்கிற அந்த தூய சொல்லுக்குத் தொலைக்காட்சி சான்றாக, துணிந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிற அடைக்கலம் அவர்களை நான் வியப்போடு பார்க்கிறேன். ஆகவே வாழ்க்கை என்பது அன்றாடப் பிரச்சினையின் அனுசரனையான முடிவுகளல்ல. ஆலமரம் போல் வளர்ந்து, அகிலத்தை நம்முடைய கால்களுக்கும் கீழே கொண்டு வந்து நிறுத்துகிற அட்டகாசமான ஆற்றல் கொண்டது. பல மனிதர்கள் ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் பொழுதே, ஏற்படுகிற சில தடைகளைக் கண்டு அஞ்சி. ஒதுங்கிப் போய் விடுவார்கள். எந்தத் தொழிலில் இடர்ப்பாடு இல்லை. தடைகள் இல்லை. ஏமாற்றம் இல்லை. எல்லாம் இருக்கின்றன. நாம் கொஞ்சம் கூடுதல் கருத்தோடு காரியங்களை அணுகினால் அவை சித்தி பெறும், சிறப்புப் பெறும் சரித்திரமே படைக்கும்.