பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் 77 1. அறிவு பலம் உள்ளவர்கள் 2. உடல் பலம் உள்ளவர்கள் 3. பணபலம் உள்ளவர்கள் 4. பதவி பலம் உள்ளவர்கள். 1. அறிவு பலம் உள்ளவர்கள்: அறிவு பலம் உள்ளவர்கள் அகிலத்தை ஆண்டு, அனைவருக்கும் அறிவுரைகள் கூறுகிறார்கள். இலக்கிய பூர்வமான இதிகாசங்களைத் தருகிறார்கள். பொழுது போக்காகப் புராணங்களைத் தருகிறார்கள். மக்களுக்கு வழிகாட்டுகிறார்கள். மகோன்னதமான பெயரைச் சூட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் ஏன் வாழ்க்கையில் நிலைத்து நிற்க வில்லை. அவர்கள் உள்ளே உணருகின்ற தர்க்க (விவாதிக்கின்ற) அறிவும், வெளியிலே பேசுகின்ற குதர்க்க அறிவும் அவர்களின் மேன்மையை வெளிப்படுத்தாமல் மட்டம் தட்டிவிடுகிறது. அறிவு உள்ளவர்கள் தங்களை அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டு முயற்சிக்கிறார்கள். சிக்கலுக்குள் சிக்குண்டு விடுகிறார்கள். அதிலிருந்து விடுபட தங்களால் முடியாது என்பதைவிட, மற்றவர்களால் விடுதலைப் படுத்த முடியாது என்றே மட்டமாக நினைக்கிறார்கள். இப்படி அறிவு பலம் கொண்டவர்கள் தன் உடம்பு தனக்கே என்பது போல தங்களின் நுண்ணறிவே தனக்கு எதிரியாகிவிடுகிறது என்பதை அறிந்து கொண்டும் அறியாமல் அவஸ்தைப் படுகிறார்கள்.